பள்ளி செல்லும் பருவம் முதல்
பழகிவரும் தோழன் நீ.
விளையாடும் வேளையிலே
துணையாகும் வேலன் நீ.
வேலெடுக்கும் வீரனாக
காத்து நிற்கும் தலைவன் நீ.
உள்ளிருக்கும் கருத்தெல்லாம்
ஒளியேற்றும் கதிரவன் நீ.
செய்யும் நல்தொழில் வளர்த்து
செழிப்பாக்கும் செந்தூரன் நீ.
உளம் மகிழும் வாழ்க்கையில்
நலம் செய்யும் நாயகன் நீ.
குன்றம் தோறும் காட்சி தந்து
குருவாய் அருளும் குமரன் நீ.
நாடுகின்ற மனம் அறிந்து
தேடிவரும் தெய்வம் நீ.
எந்த நேரம் என்றாலும்
வந்து நிற்கும் கந்தன் நீ.
அன்னை தந்தையாக வந்து
அன்பு செய்யும் அழகன் நீ.
மணம் கமழும் அருளோடு
மலர்ந்திருக்கும் முருகன் நீ.
வெல்லுகின்ற வழிநடத்தும்
வெற்றித் திருமகன் நீ.
# நன்றி.