குருவிக்கூடு:
பச்சை இலைகளைக் கிழித்து,
மெல்லிய இழைகளாக எடுத்து,
குச்சிகளோடு சேர்த்து வைத்து,
கட்டி வைத்த கட்டுமானம்.
அளந்தெடுத்த நூல் போல
அளவான நார் கோத்து,
நேர்த்தியான கூடையாகப்
பின்னி வைத்த சிறு கூடு.
மென் பஞ்சை உள்ளே வைத்து
மெத்தென்ற விரிப்புத் தைத்து
பக்குவமாய்ச் செய்து வைத்த
பாங்கான பகுமானம்.
ஓடிஓடி வேலை செய்து
ஓயாமல் இரையைத் தேடி
பாதுகாத்து வைத்திருக்கும்
சின்ன சின்ன குஞ்சுகள்.
சுகமான சுதந்திரத்தின்
சிறகுகளைச் சுருக்கி வைத்து
தாய்மையாற்றும் குருவியின்
வலிமையும் தனிச்சிறப்பு.
தவம்போல் தினமும் காத்திருக்க,
வரம்போல் சிறகுகள் முளைத்திருக்க,
வித்தைகள் காட்டும் விடாமுயற்சியில்
விரியும் சிறகுகள் மகிழ்ச்சியைக் கூட்டும்.
# நன்றி.

