அன்பே கடவுள். Anbe Kadavul.
அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி, இயற்கையின் இயக்கமாகும் இறைவன் பூசையில் மட்டுமே புகுவது இல்லை. மனதில் கட்டிய கோயிலையும் மதித்து வந்த இறைவன் அவன். மனமே முழுதும் அன்பென்றால், அகமே ஆலயம் என்பவன் இறைவன். சிதறடிக்கும்…
பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.
நிமிர்ந்து நில். நிமிர்ந்து நின்றால் சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால் அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின் வாய்ப்புக் கண்டு, நிமிர்ந்து நின்று செயலாற்று! என நித்தமும் சொல்லும் சுடர் விளக்கு. …
வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.
சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ!…
ரௌத்திரம் “பழகு”. Anger “Pazhagu”. கோபம்! கையாள வேண்டியது .
வாதம் செய்யும் வாளின் கூர்மை, வீண்வாதம் தவிர்க்கும் கேடய வலிமை. தீக்குச்சியின் தலைக்கனத்திற்கு தீப்பெட்டியின் தன்மையே பதில் சொல்கிறது. தகிக்கும் நெருப்பைக் குளிர வைக்க நீரைச் சேர்க்கலாம், ஆனால், கொதிக்கும் நீரைக் குளிர்விக்க…
அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.
சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே! உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே! சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே! காற்று வெளியில், கால்தடம் பதியா…
என்றும் முழுநிலவே. Endrum MuzhuNilave. The Full Moon.
பார்வைகள்: வட்ட நிலவே தேயும், வளரும் என்று வந்தவர் எல்லாம் சொன்னாலும், அமாவாசை அன்று பௌர்ணமி இன்றென அந்தாதியே பாடினாலும், நிலவின் மாற்றம் நிலத்திலும் தெரிவதாய் நிரூபணமே செய்தாலும், வளர்பிறைக்கும் …
மாற்றங்கள். Maatrangal.
காலம்: இளமையின் பிரகாசத்தில் அனுபவ நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால், இரவில் சூரியன் இருப்பதுமில்லை. இதுவும் இயற்கைதான் மறுப்பதற்கில்லை. செயல்பாடு: குகையில் பிறந்து, கூடி வளர்ந்து, இனத்தில்…
உணர்வுகள். Unarvukal.
அடக்குமுறை: சின்னஞ்சிறு நெருப்பும் காட்டுத் தீயாக மாறலாம். உலகின் ஏதேனுமொரு மூலையில், ஏதேனுமொரு கூட்டில், எரிந்துகொண்டிருக்கும் நெருப்பின் வேர், தொடர் நிகழ்வாகவே தூண்டப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அணைத்துவிடலாம் என்கிற அலட்சியமான…
காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.
உயிருக்கு உணவானால் மூச்சு என்றார் வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார் உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே உண்மையான உன் பெயரைச் சொல்லு. எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும்…
கரையாத நினைவுகள். Karaiyaatha Ninaivukal.
வடையின் வாசனையும் உருளைக்கிழங்கு வருவலும் உடனே தெரிந்துகொண்டு வேகமாக வந்து நிற்பாய். ஆறும்வரை பொறுமையின்றி அப்போதே வேண்டுமென்று அவசரம் காட்டியே அக்கா! என அழைப்பாய். காலை நேர பிஸ்கட்டும், குவளையில் நீரும் என்று கொஞ்சலாகக் கேட்டு…