இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.
நிலவு பாடும் பாடல் : நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள் வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும் வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும் வாழைமரம் காய்கனிகள் தந்தாட…
இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.
வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது ஏன்? அலை புரளும் ஆற்றோரம் மணல் திருடிப் பிழைப்பதும்…
பெண்கள்.சக(சகி)மனிதர்கள்: Girls. Saka(Saki)Manithargal : Common Humanity.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற…
🌹மலரும் வாழ்த்து மடல்: Malarum Vaazhththu Madal : Blooms of Greetings. Flower.
மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய்,…
வார்த்தைகளின் வலிமை என்றால் என்ன? Vaarththaikalin Valimai Endraal Enna?: Strength Of Words.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வாய்மொழி: வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அனுபவங்கள் பெரும்பாலும் வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே அமைகின்றன. உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும்…