எது உண்மையான அறிவு? Ethu Unmaiyaana Arivu? Which One is Real Knowledge?
ஓர் ஊரில் வீரன் என்பவன் இருந்தான். அவனுடைய ஊருக்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டில் விலங்குகள் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக எப்போதும் அவன் வில்லும் அம்பும் தோளில் வைத்திருப்பான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே தன்னுடைய குறிக்கோளாக வைத்திருந்தான்.…