மாற்றங்கள். Maatrangal.

    காலம்: இளமையின் பிரகாசத்தில்  அனுபவ நட்சத்திரங்கள்  கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால்,   இரவில் சூரியன் இருப்பதுமில்லை.   இதுவும் இயற்கைதான்  மறுப்பதற்கில்லை.   செயல்பாடு:   குகையில் பிறந்து,  கூடி வளர்ந்து,   இனத்தில் ஒன்றாய்  தெரிந்தாலும்,   தான்…

உணர்வுகள். Unarvukal.

    அடக்குமுறை: சின்னஞ்சிறு நெருப்பும்  காட்டுத் தீயாக மாறலாம். உலகின் ஏதேனுமொரு மூலையில், ஏதேனுமொரு கூட்டில்,  எரிந்துகொண்டிருக்கும்  நெருப்பின் வேர்,  தொடர் நிகழ்வாகவே   தூண்டப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும்  அணைத்துவிடலாம்  என்கிற  அலட்சியமான நம்பிக்கையில்.   முதுமை: கனவுகள் கரைந்துபோன   முதுமையின்…

காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

  உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்  வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்  உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே  உண்மையான உன் பெயரைச் சொல்லு.   எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே   நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே  குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே…

கரையாத நினைவுகள். Karaiyaatha Ninaivukal.

  வடையின் வாசனையும்  உருளைக்கிழங்கு வருவலும்  உடனே தெரிந்துகொண்டு  வேகமாக வந்து நிற்பாய்.    ஆறும்வரை பொறுமையின்றி அப்போதே வேண்டுமென்று  அவசரம் காட்டியே   அக்கா! என அழைப்பாய்.    காலை நேர பிஸ்கட்டும்,  குவளையில் நீரும் என்று  கொஞ்சலாகக் கேட்டு நீ …