பூனைக்குட்டி கத்துகிறது. PoonaiKutti Kaththukirathu.

    மதில்சுவர் கடந்த,  பக்கத்து வீட்டுத் தோட்டத்தில்,  செம்பருத்தி செடியின்  இரண்டடி உயரக் கிளையை  இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி,  பூனைக்குட்டி கத்துகிறது!   பயத்தின் பற்றுதலை  விடுவதற்குத் துணிந்தால்,  விடுதலையின் தொடக்கம் காலடியில்தான் இருக்கிறதாம்!  விடாமல்  கத்துகிறது பூனைக்குட்டி!  …

சுட்டியின் டச். Chuttiyin Tuch.

  குழந்தையும் தெய்வமும். யார் சொன்னது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று? கடவுள் சிலையைக்  குழந்தை தொட்டதும், டோன்ட் டச்! என்றது ஒரு குரல். குட் டச் தானே? குழப்பத்தில் கேட்டது  மற்றொரு குழந்தை. குழந்தைத்தனமாக.        .

நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.

    புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில்  புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்!  வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும்,  அறியாத முகங்களும் ...., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன்  அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை!   அம்மா...! என அழைத்தபடி  நான் ஓடிய…

நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.   நல்ல நேரம்: ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு…