உண்மைகள். Facts. Unmaigal.

உண்மைகள். Facts. Unmaigal.

வாழ்க்கை.  விழித்தால் தெரியும் காட்சிபோல  கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு.  கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல அன்பால் சிறப்பது…
நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.

நிழலின் அருமை. Nizhalin Arumai. The Caliber of the Shadow.

வெயிலில் நிழல். கோடையின் கொடுவெயிலோடு பேச்சுவார்த்தை நடத்தும் மரம், குளிர்நிழல் கொடுத்து மடியில் இளைப்பாறுதல் தருகிறது.   வெளுக்கும் வெயிலோ குடையைச் சுடுகிறது, குடையின் நிழலோ கொடையாய் வருகிறது. ஒளியில் நிழல்.  ஒளியின் இருப்புக்கு ஒற்றை சாட்சி. விரிந்தும் விலகியும் நிழலின்…
சிக்னல். Signal

சிக்னல். Signal

      சிக்னலில் நின்றிருந்த  காரின் அருகில் சென்று,  காற்றடைத்த  கலர் பொம்மைகளை  அசைத்துக் காட்டினாள்  பொம்மை விற்கும் பெண்.   அவள்,  இன்னொரு கையால்   இடுப்போடுச் சேர்த்து இறுக்கிப் பிடித்திருக்கும்  குழந்தையின் முகத்தைப்  பார்த்தபடி கையசைத்தது  காரினுள் இருந்த குழந்தை. …
நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.

நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.

அடுத்தவர் அழகை அளப்பவரும், அவர்தம் முகத்தை அறிந்திடவே அரிய வாய்ப்பைத் தந்தருளும் அற்புதப் படைப்பே கண்ணாடி.   வளரும் பருவத்தின் மாறுதலைத் தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு, சலனம் சற்றும் காட்டாமல் சகாயம் செய்யும் கண்ணாடி.   நிலையற்ற பிம்பம் கண்டாலும், நிஜமென நினைத்துக்…
மௌனத்தில் எத்தனை நிறங்கள்!  Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

  எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.…

பூவா தலையா? Poova Thalaiya? Head or Tail?

இயல்பு: பக்கமிருக்கும் நாவை பதம் பார்க்கும் பற்களும், காணாத இடத்தின் வலியைத் தாளாமல் கலங்கும் கண்களும் ஒரே முகத்தில்தான் இருக்கின்றன.     பூவா, தலையா? சுண்டப்பட்ட நாணயம் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக மண்ணில் வந்து நின்றது.   ஆம்.…

அடிப்படை அவசியம். Adippadai Avasiyam.

  தனியொருவனுக்கு:   வாழ்விடமே இல்லாதோர் எங்கெங்கோ வசிக்கின்றார். வயிற்றுப் பசியைப் போக்கிடவும் உணவுக்காக உழைக்கின்றார்.   உடுத்தியிருந்தால் நகர்ந்து சென்று மற்றது எல்லாம் பெற்றிடுவார். அடிப்படை தேவை பெறுவதற்கே உடனடி தேவை உடை என்றால்,   அரைமனித நிலைதன்னை எந்த…

இயக்கமே மனிதனின் இருப்பு. Iyakkame Manithanin Iruppu.

நம்பிக்கை: உடைந்துபோன நம்பிக்கை முற்றுப்புள்ளி அல்ல, நம்மை உறுதியாக்கும் தன்னம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி.   வாய்ப்புத் தரும் வாசல்: உலகத்தின் எல்லாச் சாலைகளும் நம் வாசலிலிருந்துதான் துவங்குகின்றன.   இடம் பொருள் அறிதல்: ஆற்று நீரில் அசையும் படகு கரையில் கல்போல் கிடக்கிறது.  …

மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

    பயத்தின் முகம்:    ஓட்டுக்குள் ஒளிந்து,  தற்காத்துக்கொள்ளும்  தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி,  தாக்குதலுக்குத் தயாராகும்   பதட்டமும்,  பயத்தின் எல்லைக்குள்  நிறம் மாறுகின்ற  ஒரே முகம்தான்.   வலிமையின் முகம்.   தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத் தகர்ப்பதும்;   கணிக்கப்பட்ட நகர்வாக …

எதிர்நீச்சல். Ethirneechchal.

    பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப்…