ஆதாரபூர்வமான நம்பிக்கையே, தன்னம்பிக்கை. Aathaarapoorvamaana Nambikkaiye, Thannambikkai.Basic Proofs of Belief is the Evidence of Self Confidence,

நம்பிக்கையின் ஆதாரம்: 

குறிக்கோளில் வெற்றியடைய வேண்டும் என்ற மனதின் ஒரு எண்ணம் நிறைவேற, நடைமுறையில் பல செயல்நிலைகளைக் கடக்க வேண்டி உள்ளது.  இவ்வாறு கடந்து வரும் செயல்பாடுகளே, தகுதிக்கான ஆதாரங்களாக (Proof of Active Activityயாக) மூளையில் பதிவாகின்றன.  

மூளையின் இந்தப் பதிவுகள் தகவல் பரிமாற்றம் மூலம் மனவுறுதியை ஏற்படுத்தி, உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான இயக்க ஆற்றலை அளிக்கிறது.  இந்நிலையில் செய்யப்படும் ஒவ்வொரு புது முயற்சியும் குறிக்கோளை நோக்கிய தன்னம்பிக்கையான செயல்பாடாக வெளிப்படுகிறது.  

தன்னம்பிக்கை:

ஒருவரது மனம், மூளை, உடல் இவை மூன்றிற்கும் இடையில் நடக்கும் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றமே, அவரது விருப்பத்தைச் சாதனையாக மாற்றுகிறது.  இதனால்தான் விருப்பத்தின் பேரில் நீச்சல் கற்றுக்கொள்ளும் சிலர் நாளடைவில் கடலையே நீந்திக் கடந்து சாதனைப் படைக்கிறார்கள். 

இத்தகைய முயற்சிகளில், “முறையாக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளும், எதிர்கொள்ளப்படும் போட்டிகளும்” உடல் தகுதிக்கும், மனவுறுதிக்கும் மட்டுமல்லாது, இவற்றிற்கு அடிப்படையாக உள்ள மூளைக்கும் ஆதாரங்களை சேகரிக்கத் தேவைப்படுகின்றன.  

இந்தத் தொடர்பயிற்சிகள், விழிப்பு நிலையில் உள்ள மூளையில் (Optimal Thinking) “முடியும்” என்ற ஆதாரபூர்வமான நம்பிக்கையை உருவாக்கி, மனதின் எண்ணத்தை உறுதியாக்கி, அதைச் செயல்படுத்தும் சக்தியை உடலுக்குத் தருகிறது. 

இது தனிப்பட்ட ஒருவரின் விழிப்புநிலையின் திறனைப் பொறுத்து, அந்தச் செயல் சிறப்புத் தன்மை பெறுகிறது.  

தன்னம்பிக்கை ஏன் குறைகிறது?:

பயிற்சிகள், போட்டிகள் போன்றவற்றில் ‘தேவையான தகுதியைப் பெற்ற பிறகும்’, இதற்கான ஆதாரங்கள் மூளையின் விழிப்புநிலைக்குப் போதுமான அளவு  கிடைக்காதபோது, மனதில் பயம், தயக்கம் ஏற்படுகிறது.  இதனால் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுத் தன்னம்பிக்கைக் குறைகிறது.     

1. இதை உடனுக்குடன் கண்டறிந்து, பயத்தையும், தயக்கத்தையும் நீக்கும் வகையில், கூடுதலாகத் தரப்படும் பயிற்சிகள், போட்டிகள் போன்றவை மூளையின் கவனத்திற்குத் தெளிவாகப் பதிவாகும் நிலையில் மனதில் நம்பிக்கை உருவாகிவிடும்.

2. சில சூழல்களில் உண்மையான தகுதியைவிட அதிகமாக இருக்கும் சுயஎதிர்பார்ப்பினால் அதீத மனப்பதட்டம் ஏற்படுகிறது.  இந்நிலையில் உள்ள மனபதட்டத்தைக் குறைக்க எதிர்பார்ப்புக்கேற்ற திறனை வளர்த்துக்கொண்டு முழுகவனத்துடன் தகுதியை மேம்படுத்துவதே சிறந்த வழியாக இருக்கும். 

இவ்வாறு செயல்படும் ஒவ்வொரு செயலின்போதும் அதை மூளையில் நன்கு பதியும் வகையில் கவனப்படுத்திக் கொள்வது மூளைக்குத் தரும் முக்கியமான தகவல் பரிமாற்றம் ஆகும்.  எந்த வேளையிலும், எந்த வேலையிலும் மூளையின் விழிப்புணர்வே நம்முடைய உண்மையான தகுதியை உணர்ந்து, நம்பிக்கையோடு செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கிறது.  

ஒருங்கிணைப்பு:

போதுமான அளவு ஆதரங்கள் இருந்தும், நினைவுகளில் மங்கி இருக்கும் தகவல்களை, திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் நேர்மறையான சிந்தனை பரிமாற்றம் (Positive Self Talk) மிகச்சிறந்தப் பலனை அளிக்கும்.  

இவ்வாறு உடல், மனம், மூளை என்ற மூன்றும், ஒருங்கிணைந்து செயல்படும் நேர்த்தி, தனிநபரின் முனைப்பைப் பொறுத்துச் சிறப்பாக அமைகிறது.  இந்நிலையில் வெளிப்படும் தன்னம்பிக்கையான செயல், வெற்றி தோல்விகளைக் கடந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

#   நன்றி.  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *