சிக்னலில் நின்றிருந்த
காரின் அருகில் சென்று,
காற்றடைத்த
கலர் பொம்மைகளை
அசைத்துக் காட்டினாள்
பொம்மை விற்கும் பெண்.
அவள்,
இன்னொரு கையால்
இடுப்போடுச் சேர்த்து
இறுக்கிப் பிடித்திருக்கும்
குழந்தையின் முகத்தைப்
பார்த்தபடி கையசைத்தது
காரினுள் இருந்த குழந்தை.
………………………………………………………..