தொலைக்காட்சியின் ஒரு அறிவிப்பு:
“நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது,
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..”.
வியப்புடன் குழந்தை கேட்டது
“நாம் பார்த்துக்கொண்டிருப்பது
அவர்களுக்கு எப்படித் தெரிகிறது?”,
பார்ப்பவர்களுக்காக,
பொதுவாகச் சொல்லப்பட்டது,
பார்த்தவர்களுக்கே சென்றடைகிறது.
விளைவுகள் பொதுவாய் நிரந்தரம்,
வினைகள் மட்டுமே வழித்தடம்.
ஆயிரம் அலைவரிசைகள்
இயக்கத்தில் இருந்தாலும்,
வாய்ப்புகளை வரவேற்பதும்,
வாழ்க்கையின் அனுபவம் பெறுவதும்
உங்கள் விருப்பமே!
# நன்றி .