உடலும் உயிரும் தந்தவரைப்
பெற்றோர் என்றே கூறுகின்றார்.
தந்தது எல்லாம் பெற்றதுதான்
என்றே அப்பெயர் பெற்றாரா!
யாரிடமிருந்து எதைப் பெற்று
பெற்ற கடனை அடைக்கின்றார்!
பிள்ளைகள் என்ற பேறு பெற்று
அவர்கள் நலனே மனதில் பெற்று
தலைமுறை தாக்கம் தினமும் பெற்று
தாக்கும் சூழலின் பயிற்சி பெற்று
மருட்கையும் மகிழ்ச்சியும் மனதில் பெற்று
முதுமையின் பரிசுகள் முடிவில் பெற்று; என,
வாழ்க்கை தருகின்ற அனுபவத்தை
வாழ்நாள் முழுவதும் பெறுவதனால்
பிள்ளைகள் தம்மைப் பெற்றவரைப்
பெற்றோர் என்று கூறினரோ!
# நன்றி.