அணுவினுள் கருவெனச் சுருக்கி,
அண்டத்துள் அடங்காமல் பெருக்கி,
இயற்கையின் இயக்கமாகும் இறைவன்
பூசையில் மட்டுமே புகுவது இல்லை.
மனதில் கட்டிய கோயிலையும்
மதித்து வந்த இறைவன் அவன்.
மனமே முழுதும் அன்பென்றால்,
அகமே ஆலயம் என்பவன் இறைவன்.
சிதறடிக்கும் எண்ணங்களைச்
சீராக்கும் சித்தம் இறைவன்.
வாழும் உயிர்களின் வாட்டம் கண்டு
உணர்ந்து உதவும் உள்ளம் இறைவன்.
ஆணவம் என்ற அழுக்கை நீக்கி
அமைதி அருளும் அன்பே இறைவன்.
உயர்வும் தாழ்வும் இல்லை என்றே
உயிரின் ஊற்றாய் உள்ளே இறைவன்.
அன்பு நிறைந்த நெஞ்சம் கொண்ட
அனைத்து உயிரிலும் ஓர் இறைவன்.
அடுத்த உயிரின் உணர்வை மதித்து
அன்பு செய்யும் மனமே இறைவன்.
# நன்றி .