புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில்
புத்தம்புது மாணவி நான்.
வரிசையாகப் பிள்ளைகள்!
வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்!
புரியாத சத்தமும்,
அறியாத முகங்களும் ….,
மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன்
அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை!
அம்மா…! என அழைத்தபடி
நான் ஓடிய வேகத்தில்,
பிடிப்பதற்குப் பாய்ந்துவந்த
ஐந்தாம் வகுப்பு அண்ணன்களிடம்
சிக்காமல் தலை திருப்ப,
பளிச்செனத் தெரிந்தது
மரத்தின் பின்னே ஒளிந்து நின்ற
அம்மாவின் முகம்!
அவ்வளவு அருகில் நின்றிருந்தும்
அருகே வராத அம்மா!!!
என்றும் எனக்கு இப்படிதான்
பாடம் சொல்கிறாள்!
“உன் சூழ்நிலையை நீயேதான்
எதிர்கொள்ள வேண்டும்” என்று.
மறைந்து நின்று,
மவுனமாகச் சொல்லும் அம்மாவை
மனதார நினைத்துக்கொள்கிறேன், எப்போதும்.
# நன்றி.