நினைவில் நின்ற முகம்.  Ninaivil Nindra Mugam.

நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.

புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில்  புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்!  வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும்,  அறியாத முகங்களும் ...., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன்  அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை!   அம்மா...! என அழைத்தபடி  நான் ஓடிய வேகத்தில்,  பிடிப்பதற்குப்…
The open book is glittering

புதுப் புத்தகம். Puthu Puththakam. New Book.

கைக்கூப்பி நீ பார்த்தும்  காணாமல் நான் கடந்தால்  காரணம் வேறு கிடையாதே - உன்னை   கண்டுவிட்டால் என் மனமோ  கடுகளவும்  விலகாதே!    அழகாக வீற்றிருப்பாய்  அரசிளங் குமரனாய்! அணிவகுக்கும் சுயம்வரத்தில்   அச்சிட்டப் புத்தகமாய்!    விலை கொடுத்து வாங்கி வந்த  புத்தகமே…
The squirrel biting the plant

புதிய தோழமை: Puthiya Thozhamai

பாங்கான  பால்கனியில் புத்தம்புது  பூந்தொட்டி! அதில்  நட்டு  வைத்த செடியொன்று நளினமாய்த்  துளிர்விட்டது.   இலை  விரித்துக்   கிளைவிட்டது,  இன்பம்   அதில்   முளைவிட்டது.  சின்னஞ்சிறு    அணில்குட்டியும்  சேர்ந்து    குதித்து   ஆடியது.   மனதில்   பொங்கிய   ஆர்வத்தோடு மறுநாள்   சென்று …
The sky with stars that reflect on water

எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan

முகைக்குள்ளே  வாசம்  வைத்து, கனிக்குள்ளே   சுவையை வைத்து, விதைக்குள்ளே  விருட்சம்   வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே  தண்மை   வைத்து, தணலுக்குள் கனலை   வைத்து, மலைக்குள்ளே  சுனையை   வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள்    பொன்னை   வைத்து, விண்ணுக்குள்    மின்னல்   வைத்து, கண்ணுக்குள்    ஒளியை   வைத்து, காட்சியாய்…
The girl showing thumbsup

உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil

கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும். பட்டம்  பெறும் கல்வி மட்டும்  படித்து விட்டால் போதாது,  விதவிதமாய் வகுப்புகளில்  பலவிதமாய்ப் படித்தாலும்,  உலக வாழ்க்கை அதுவல்ல  உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல;  சிந்தனையில் செறிவு வேண்டும்  சீர்மிகு எண்ணம் வேண்டும்;  மயக்கும்…
Sun sises in the landscape with mountains and trees near the lake

காலை வணக்கம்: புதிய சூரியன். ஞாயிறு போற்றுவோம். Kaalai Vanakkam: Good Morning: Let’s Praise The Sun.

உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப்  போக்கி ஒளியைத்  தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர  உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு  செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன்.…
The full moon gives light in the garden with trees and a small bridge

இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.

நிலவு பாடும் பாடல் : நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள்  வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும்  வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும்  வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங்  கீற்றிடையே தென்றல் வந்து…
Banana trees with saplings

இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.

வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது ஏன்? அலை புரளும் ஆற்றோரம் மணல் திருடிப் பிழைப்பதும்…
girl shows the face from covered scarf

பெண்கள்.சக(சகி)மனிதர்கள்: Girls. Saka(Saki)Manithargal : Common Humanity.

  பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…