காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

  உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்  வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்  உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே  உண்மையான உன் பெயரைச் சொல்லு.   எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே   நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே  குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே…

கரையாத நினைவுகள். Karaiyaatha Ninaivukal.

  வடையின் வாசனையும்  உருளைக்கிழங்கு வருவலும்  உடனே தெரிந்துகொண்டு  வேகமாக வந்து நிற்பாய்.    ஆறும்வரை பொறுமையின்றி அப்போதே வேண்டுமென்று  அவசரம் காட்டியே   அக்கா! என அழைப்பாய்.    காலை நேர பிஸ்கட்டும்,  குவளையில் நீரும் என்று  கொஞ்சலாகக் கேட்டு நீ …

பூனைக்குட்டி கத்துகிறது. PoonaiKutti Kaththukirathu.

    மதில்சுவர் கடந்த,  பக்கத்து வீட்டுத் தோட்டத்தில்,  செம்பருத்தி செடியின்  இரண்டடி உயரக் கிளையை  இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி,  பூனைக்குட்டி கத்துகிறது!   பயத்தின் பற்றுதலை  விடுவதற்குத் துணிந்தால்,  விடுதலையின் தொடக்கம் காலடியில்தான் இருக்கிறதாம்!  விடாமல்  கத்துகிறது பூனைக்குட்டி!  …

சுட்டியின் டச். Chuttiyin Tuch.

  குழந்தையும் தெய்வமும். யார் சொன்னது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று? கடவுள் சிலையைக்  குழந்தை தொட்டதும், டோன்ட் டச்! என்றது ஒரு குரல். குட் டச் தானே? குழப்பத்தில் கேட்டது  மற்றொரு குழந்தை. குழந்தைத்தனமாக.   

நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.

    புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில்  புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்!  வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும்,  அறியாத முகங்களும் ...., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன்  அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை!   அம்மா...! என அழைத்தபடி  நான் ஓடிய…

📙புதுப் புத்தகம். Puthu Puththakam. New Book.

  கைக்கூப்பி நீ பார்த்தும்  காணாமல் நான் கடந்தால்  காரணம் வேறு கிடையாதே - உன்னை   கண்டுவிட்டால் என் மனமோ  கடுகளவும்  விலகாதே!    அழகாக வீற்றிருப்பாய்  அரசிளங் குமரனாய்! அணிவகுக்கும் சுயம்வரத்தில்   அச்சிட்டப் புத்தகமாய்!    விலை கொடுத்து வாங்கி வந்த …

புதிய தோழமை: Puthiya Thozhamai

பாங்கான  பால்கனியில் புத்தம்புது  பூந்தொட்டி! அதில்  நட்டு  வைத்தச் செடியொன்று நளினமாய்த்  துளிர்விட்டது.   இலை  விரித்துக்   கிளைவிட்டது,  இன்பம்   அதில்   முளைவிட்டது.  சின்னஞ்சிறு    அணில்குட்டியும்  சேர்ந்து    குதித்து   ஆடியது.   மனதில்   பொங்கிய   ஆர்வத்தோடு மறுநாள்   சென்று …

எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan

முகைக்குள்ளே  வாசம்  வைத்து, கனிக்குள்ளே   சுவையை வைத்து, விதைக்குள்ளே  விருட்சம்   வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே  தண்மை   வைத்து, தணலுக்குள் கனலை   வைத்து, மலைக்குள்ளே  சுனையை   வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள்    பொன்னை   வைத்து, விண்ணுக்குள்    மின்னல்   வைத்து, கண்ணுக்குள்    ஒளியை   வைத்து, காட்சியாய்…

உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil

கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும்.  பட்டம்  பெறும் கல்வி மட்டும்  படித்து விட்டால் போதாது, விதவிதமாய் வகுப்புகளில்  பலவிதமாய்ப் படித்தாலும், உலக வாழ்க்கை அதுவல்ல உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல; சிந்தனையில் செறிவு வேண்டும் சீர்மிகு எண்ணம் வேண்டும், மயக்கும் நிலைதனை…

☎காலம் 📲மாறிப் போச்சு : Kaalam Maari Pochu:

வெண்ணாற்றங் கரையினிலே வெண்ணிலா ஒளியினிலே வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்! ஆறெல்லாம் மணலாக மணல் எல்லாம் வீடாக அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!! வேப்பமர கிளையினிலே ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளம் மகிழ்ந்ததுண்டு, ஒருகாலம்! வீட்டுக்குள் அடைகாத்து கைப்பேசிக்குள்  கண்பதித்து…