காலம்:
இளமையின் பிரகாசத்தில்
அனுபவ நட்சத்திரங்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
இதனால் ஏதும் பாதகமில்லை.
ஆனால்,
இரவில் சூரியன் இருப்பதுமில்லை.
இதுவும் இயற்கைதான்
மறுப்பதற்கில்லை.
செயல்பாடு:
குகையில் பிறந்து,
கூடி வளர்ந்து,
இனத்தில் ஒன்றாய்
தெரிந்தாலும்,
தான் வாழும் இடத்தை
அறை, சிறை,
தொழுவம், பட்டி,
லாயம், கொட்டில்,
மடம், மாளிகை,
சகதி, சாக்கடை,
கூடு, கூண்டு,
திண்ணை, தெருமுனை,
சொர்க்கம், நரகம்,
புற்று, பொந்து,
குளம், குட்டை,
களம், கடல்,
நூலகம், செயலகம்,
கோயில், வீடு என்று,
தன் வாழ்விடத்தைத்
தனக்கேற்றபடி
அமைத்துக்கொள்ளும்
தனித்துவமான
செயல்பாடுகள்
மனிதனுக்கு மட்டுமே உண்டு.
# நன்றி .