பார்வைகள்:
வட்ட நிலவே
தேயும், வளரும் என்று
வந்தவர் எல்லாம்
சொன்னாலும்,
அமாவாசை அன்று
பௌர்ணமி இன்றென
அந்தாதியே
பாடினாலும்,
நிலவின் மாற்றம்
நிலத்திலும் தெரிவதாய்
நிருபணமே
செய்தாலும்,
வளர்பிறைக்கும்
தேய்பிறைக்கும்
சோதிடம் ஆருடம்
கூறினாலும்,
நிலவினில் எந்த
மாற்றமும் இல்லை.
வளர்பிறையும்
தேய்பிறையும் அந்த
நிலவுக்கில்லை.
# நன்றி .