சிறகுகள்:
கூடிப் பேசி
கொத்தும் குருவிகள்
மகிழ்ச்சியின்
சத்தம் பகிர்கிறதே!
உயரப்பறக்கும்
குருவிகள் கூட்டம்
உள்ளத்தில்
உவகையும் தருகிறதே!
சுமைகள் அற்ற
சுதந்திரம் என்பதை
சுவைக்கும்
ஆற்றல் தெரிகிறதே!
காற்று வெளியில்,
கால்தடம் பதியா
பறவையின் நகர்வு,
மனதில் ஏதோ செய்கிறதே!
மனிதன் என்ற
ஆணவம் எல்லாம்
விரிந்த சிறகில்
சிறைபடுதே!
எழுச்சி:
மேகச்செடிகள்
பூத்துக் குலுங்கி,
மண்ணில் விழுந்த
மழைத்துளிகள்.
விழுந்த இடத்தில்
விழித்து எழுந்து,
சிரித்து மலர்ந்த
பூச்செடிகள்.
# நன்றி .