இயல்பு:
பக்கமிருக்கும் நாவை
பதம் பார்க்கும் பற்களும்,
காணாத இடத்தின் வலியைத்
தாளாமல் கலங்கும் கண்களும்
ஒரே முகத்தில்தான் இருக்கின்றன.
பூவா, தலையா?
சுண்டப்பட்ட நாணயம்
எந்தப் பக்கமும் சாயாமல்
நேராக மண்ணில் வந்து நின்றது.
ஆம். நாணயம் என்பது
எந்தப் பக்கமும்
சார்ந்தது இல்லையே!
ஆனால்,
இரண்டில் ஒன்றை
தேர்ந்தெடுக்க
நாணயத்தின் நடுநிலை
நடைமுறையில் புறக்கணிக்கப்படுகிறது.