வாதம் செய்யும்
வாளின் கூர்மை,
வீண்வாதம் தவிர்க்கும்
கேடய வலிமை.
தீக்குச்சியின்
தலைக்கனத்திற்கு
தீப்பெட்டியின்
தன்மையே
பதில் சொல்கிறது.
தகிக்கும் நெருப்பைக்
குளிர வைக்க
நீரைச் சேர்க்கலாம்,
ஆனால்,
கொதிக்கும் நீரைக்
குளிர்விக்க
நெருப்பை விலக்குவதே
முதல் உதவி.
ஒரு விநாடியின்
தற்காலிக வெளிப்பாடு,
நிரந்தர விளைவாகவும்
இருக்கலாம்.
கோபத்தில் விளையும்
வெற்றி என்பது
வெல்வதில் இல்லை,
எதை வென்றோம்
என்பதில் இருக்கிறது.
# நன்றி .