சிறு புள்ளி போன்ற
ஒரு விதைக்குள்
வேரும், மரமும்,
கிளையும், இலையும்
ஒளிந்து இருந்தது எப்படியோ!
……………………………………………………………...
வண்ணப்பூக்கள்
காலை நேரம்,
வெள்ளைப்பூக்கள்
மாலை மலரும் என்று
வண்ணத்திற்கும்
வாசத்திற்கும்
முறை அமைத்தது யாரோ!
…………………………………………………….
விளக்கின்
வெளிச்சம் நாடும்
விட்டில் பூச்சிகள்
விடியலை ஏனோ
தேடுவதில்லை!
………………………………………………….
சுட்டெரிக்கும் சூரியனே
சுடமுடியாதக் கரும்புள்ளிகள்
எப்படி வந்ததோ அதனுள்!
…………………………………………………….
கோடையில் உறிஞ்சும்
நீரையெல்லாம்
கொட்டும் மழையாக
மாற்றும்வரை
மேகப் பெட்டகத்தில்
சிந்தாமல் சேமிக்கும் வானம்!
# நன்றி .