நம்பிக்கை:
உடைந்துபோன
நம்பிக்கை
முற்றுப்புள்ளி அல்ல,
நம்மை உறுதியாக்கும்
தன்னம்பிக்கையின்
ஆரம்பப்புள்ளி.
வாய்ப்புத் தரும் வாசல்:
உலகத்தின்
எல்லாச் சாலைகளும்
நம் வாசலிலிருந்துதான்
துவங்குகின்றன.
இடம் பொருள் அறிதல்:
ஆற்று நீரில் அசையும் படகு
கரையில் கல்போல் கிடக்கிறது.
நிலத்தில் நன்கு ஓடும் வண்டி
நீரில் நீந்த மறுக்கிறது.
பாறையில் விழுந்தால் விதையும்கூட
பாழாய்க் காய்ந்து போகிறது.
தூயநீரும் தேங்கி நின்றால்
சேற்றுக் குட்டை ஆகிறது.
அம்மிக்கல்லைச் செதுக்கினாலும்
அழகுச் சிலையா வருகிறது?
திறமை என்பதும் இடத்தைப் பொறுத்தே
பெருமையாக வளர்கிறது.
# நன்றி .