நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.   நல்ல நேரம்: ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு…

சமயோசிதமான செயலே சாமர்த்தியம். Samayosithamaana Seyale Samarththiyam.Simple but Significant.

மாற்றுச் சிந்தனை: வயதான பெண்மணி ஒருவர் தான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும்  வங்கிக்குச் சென்றார்.  அங்குத் தனக்கான அழைப்பு எண் அறிவிக்கப்பட்டதும்,  கவுன்டரில் இருந்த காசாளரிடம், தன்னுடைய கணக்கில் இருந்து ஐந்நூறு ருபாய் எடுப்பதற்காகப் பூர்த்தி செய்யப்பட்டச் சீட்டைக் கொடுத்தார்.   காசாளர் அந்த வயதான பெண்மணியை, வெளியே…

காட்சிப் பிழையா? கருத்தில் பிழையா? Kaatchi Pizhaiya? Karuththil Pizhaiya? Reality vs Hypothetical

குட்டி கதை: பெரியதம்பி, வெளியூரில் ஒரு வேலையை முடித்துவிட்டுத்  தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்தான்.  தான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் அங்கிருந்த மூவர் அமரும் வகையில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.  தன்னுடைய சிறிய கைப்பையை அருகில்…

மனநலம் காக்கும் குண நலன்கள்: Mana Nalam Kaakkum Kuna Nalangal: The Traits to Protect Mental Health.

மனநலம்: உடல்நலம் காப்பதற்குச் சரிவிகித உணவும், அளவான உடற்பயிற்சியும் உதவுவது போல, மனநலம் காப்பதற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் அவசியமாகிறது. மனச்சோர்வு ஏற்படுத்துகின்ற சில சூழ்நிலைகளை மனவுறுதியோடு கடந்து செல்வதற்குத் தேவையான சில குணநலன்களை இன்றைய நம் சிந்தனையில் பார்க்கலாம். பொறுமை: பெரும்பாலான நேரங்களில்…

நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.

நடைமுறை: வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.  இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான கருத்துகளை நடைமுறையோடு புரிந்துகொள்ளவும் முடிகிறது. கட்டுப்பாடு: அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு திருடன்…

நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY

அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப்  பெறுகிறோம்.  இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த,  ஒருவரின் சிறப்புத் தன்மையாக  வெளிப்படும் செயல்களே அவரது…