கல்விக்கூடம் போகவேண்டும்
கலைகள் பல கற்க வேண்டும்.
பட்டம் பெறும் கல்வி மட்டும்
படித்து விட்டால் போதாது,
விதவிதமாய் வகுப்புகளில்
பலவிதமாய்ப் படித்தாலும்,
உலக வாழ்க்கை அதுவல்ல
உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல;
சிந்தனையில் செறிவு வேண்டும்
சீர்மிகு எண்ணம் வேண்டும்;
மயக்கும் நிலைதனை ஒதுக்கிடல் வேண்டும்
மானம் பெரிதெனும் மதிநிலை வேண்டும்;
கருணை பொங்கும் உள்ளத்தோடு
உரிமைக்காகப் போரிட வேண்டும்;
உலக மக்கள் அனைவரையும்
உயர்வெனக் கொள்ளும் குணம் வேண்டும்;
ஒழுக்கமும் அறிவும் ஒன்றெனல் வேண்டும்
சிறந்த நூல் பல கற்றிடல் வேண்டும்,
சரித்திரம் நீயே படைத்திட வேண்டும்
சமூகம் உன்னால் உயர்ந்திட வேண்டும்,
மனிதம் காக்கும் மாண்பு பெற்று
மனிதனாக வாழ்ந்திட வேண்டும்.
உள்ளம் நிறைந்த அன்பு கொண்டு
உலகம் போற்ற உயர வேண்டும்.
# நன்றி.