உண்மைகள். Facts. Unmaigal.

உண்மைகள். Facts. Unmaigal.

வாழ்க்கை.  விழித்தால் தெரியும் காட்சிபோல  கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு.  கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல அன்பால் சிறப்பது…

வாய்ப்புக்குள் ஒளிந்திருக்கும் வளமான வாழ்க்கை. Vaaippukkul Olinthirukkum Valamaana Vaazhkkai. Prosperous Life May hide in Opportunity.

1837ல் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் (Robert Augustus Chesebrough) தன் இளவயதில் எண்ணெய் பிரித்தெடுக்கும் வேதியியல் துறையில் பணி செய்துகொண்டிருந்தார்.  கெரசின் என்ற எரிபொருளைச் சுத்தம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்த ராபர்ட் அப்பணியைச் சில காரணங்களால் இழக்க நேரிட்டது.   அப்போது, பெட்ரோலியம்…

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையானவை எவை? Magizhchchiyaana Vaazhkkaikku Thevaiyaanavai Evai? The Essentials for a Happay Life.

தேடுதலும், புரிதலும்: உலகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம்.  ஆனால் இதை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் சாத்தியபடுத்த முடிவதில்லை.  பெரும்பாலான நேரங்களில், பொறுப்புகளையும், பிரச்சனைகளையும் தவிர்க்க நினைக்கும் மனம் மகிழ்ச்சியை ஏக்கத்தோடு தேடிக்கொண்டே இருக்கிறது.  இவ்வாறு பொறுப்புகள் இல்லாத, பிரச்சனைகளற்ற…

எண்ணங்கள் என்ன சொல்கின்றன? Ennangal Enna Solkindrana? Thought Says The Way To Go.

வாய்ப்பே வரம்:  ஒரு ஊரில் வீரன், சூரன் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.  ஒருநாள் இருவரும் தங்களுடைய குதிரைகளில் காட்டுவழியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.  மாலை நேரம் ஆகிவிட்டதால் தங்கள் குதிரைகளுக்குத் தேவையான உணவும், நீரும் கொடுத்துவிட்டு, இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து…

வெற்றி நிச்சயம், அதில் மகிழ்ச்சி முக்கியம்:Vetri Nichchayam, Athil Makizhchchi Mukkiyam.Success is Sure, Do Ensure The Happiness in That.

தொட்டுவிடும் தூரம்தான். சிறந்த குருவும், அவருடைய சீடரும் வெற்றியூர் என்ற ஒரு ஊரை நோக்கி  சென்றுகொண்டிருந்தனர்.  நீண்ட தூரம் நடந்த பின்னர், எதிரில் வந்த விவசாயிடம், ஊரின் பெயரைச் சொல்லி,  "அந்த ஊர் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?", என்று சீடர் கேட்டார்.  அந்த விவசாயி, "இன்னும் இரண்டு கிலோமீட்டர்…

உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.

உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன.  எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன.  இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது.   தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.  இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை.  இன்னும் சொல்லப்போனால்…

அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?

அன்புமொழி:  தன்னைப் போல பிறரை என்னும்  தன்மை வேண்டுமே  அந்தத் தன்மை வர உள்ளத்திலே  கருணை வேண்டுமே!  என்ற பாடலைக் கேட்டிருப்போம்.  இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து உதவும்…

மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.

சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான்.   யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான்.  அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே எடுத்துச்சென்று அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வான்.…

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …

அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE

அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும்,   நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவமாகப் பதிவாகின்றன.  அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும்,  வாழ்க்கை முறைகளைப் பொருத்தும்  அமைகிறது.     இந்த நிலைகளை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும்…