கஞ்சன் தந்த கூலியும், அதை மிஞ்சிய வேலையும். Kanjan Thantha Kooliyum, Athai Minjiya Velaiyum. Simple Strategy.

ஓர் ஊரில் இருக்கும் செல்வந்தரிடம் முருகன் என்பவன் வேலை செய்துகொண்டிருந்தான்.  செல்வந்தருடைய தென்னந்தோப்பு, மாந்தோப்பு மற்றும் காய்கறி தோட்டம் போன்றவற்றைச் செழிப்பாகப் பராமரித்துக் கொண்டு பொறுப்போடு இருந்தான்.  செல்வந்தரும் முருகனுக்குத் தோட்டத்திலேயே சிறிய வீடு கொடுத்து, அவனுக்கு நல்ல சம்பளமும் கொடுத்துத் தன் வீட்டிலேயே உணவளித்து, அன்பாகக்…

போலிவள்ளலின் தந்திரமும், ஒளவையின் சாதுர்யமும். PoliVallalin Thanthiramum, Avvaiyin Saathuryamum. Tact and Diplomacy.

ஓர் ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான்.  அவன் தன்னுடைய செல்வத்தைப் பயன்படுத்தி யாருக்கும் எந்த நன்மையும் செய்தறியாதவன்.  ஆனால், புலவர்கள் வள்ளல்களை நாடுவதுபோல தன்னையும் நாடி வந்து பாடிப் புகழ வேண்டும் என்று விரும்பினான்.  ஆனால் அதற்காக ஒரு காசுகூட செலவு செய்துவிடக் கூடாது…

மனஅழுத்தம் எனும் stress. தவிர்க்க வழி இருக்கிறதா? Mana Azhuththam Enum Stress. Thavirkka Vazhi Irukkirathaa? Way To Handle the Stress.

முன்குறிப்பு: சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் சூழல்களில், மனஅழுத்தம் ஏற்படாமல் அவற்றைக் கையாள முடியுமா என்ற சிந்தனையே இந்தப் பகிர்வு.  மனஅழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் துறைசார்ந்தவர்களை அணுகுவதே முறையானது.   காரணங்கள்: இன்றைய வேகமான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை  அனைவரது இயல்பு வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மனஅழுத்தம் ஏன் ஏற்படுகிறது?  மனஅழுத்தம்…

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. Vallavanukku Vallavan Vaiyakaththil Undu.Mighty Man.

ஓர் ஊரில் பலவான் என்ற மல்யுத்த வீரன் இருந்தான்.  அவன் எப்போதும் கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான்.  இதனால் மிகவும் பலசாலியான அவன் போட்டிக்கு வரும் அனைவரையும் எளிதாக வென்றுவிடுவான்.  அவனால் பெருமையடைந்த அந்த ஊர் மக்கள் அவனைப் பாராட்டி மரியாதைச் செய்து கொண்டாடினார்கள்.   நாளடைவில்…

ஏணியாகும் எண்ணங்கள்: Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

நம்முடைய எண்ணங்களே நம்முடைய உயர்வுக்கும் பின்னடைவுக்கும்  காரணமாக இருக்கின்றன.  தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது  என்றும், அவை நம்முடைய எண்ணங்களின் விளைவால் ஏற்படுகின்றன என்றும் கற்றறிந்த, அனுபவமிக்கப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் பிறருடைய தாக்கங்கள் இருக்காதா என்று யோசிக்கலாம்,…

கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்   செல்வத்துள் எல்லாம் தலை ".  அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும்.  இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின்  அருமை தெரிந்து, அதை நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?…

அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும். Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.

ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான்.  ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது.  அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம்…

உயிர்களின் சாட்சி, செயல். வள்ளுவர் கூறும் SoftSkills.Uyirkalin Saatchi, Seyal. Valluvar Koorum SoftSkills. Activity is the Witness of Liveliness.

எது சிறந்த செயல்?:  உலகின் ஒவ்வொரு அசைவும் ஒரு செயல், அசையாதிருப்பதும் செயலே.  பேச்சும் செயலே, மௌனமும் செயலே.  விளைவுகளை ஏற்படுத்தும் எதுவும் செயலே.   ஞானியின் (நினையாத, நீங்காத) மௌனம் மோனம்.  குருவின் மௌனம் உபதேசம்.  (பாஞ்சாலியின்) துகிலுரிந்த சபையின் மௌனம் வன்முறை.  கைகேகியின்…

பலமும், பலவீனமும். கையாள்வது எளிதா? Balamum, Balveenamum. Kaiyaalvathu Elitha? Chances to Strengthen Our Life.

விவேகம்:  கண்களின் தன்மைகளை உணர்ந்து, தெளிவான பார்வைக்காக அணியப்படும் மூக்குக் கண்ணாடிகள், வெப்பத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள், பொருளைப் பெரிதுபடுத்திக் காட்டும் தொழில்சார்ந்த பூதக்கண்ணாடிகள், என சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பலவிதமான கண்ணாடிகள் பார்வைக்குத் துணை செய்யும் கருவிகளாகப் புழக்கத்தில்…

பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். Paarvaikal Palavitham Ovvondrum Oruvitham. Types of Angles and Altitude.

அளவுகோல்: எண்ணம்:  வெளிப்படும் சூழ்நிலையைப் பொருத்தும், வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பொறுத்தும், எண்ணத்தின் மதிப்புத் தீர்மானிக்கப்படுகிறது.  வாழ்க்கையின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்த இத்தகைய எண்ணங்களைப் பற்றிய நம்முடைய பார்வைகளைச் சற்று வேறு கோணத்தில் பார்க்கும்போது, அந்த எண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பது நம்…