மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும். Malar Pola Malarkindra Manam Vendum. Refreshment of Mind.

பழையன கழிதலும், புதியன புகுதலும். சாதாரணமாக நம் வீடுகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் அந்தப் பொருளையும், அது சம்பந்தமான முக்கியமான ரசீதுகளையும் உரிய இடத்தில் பத்திரமாக வைப்போம்.  அதனுடைய அட்டைப்பெட்டியை உடனே வெளியில் போட்டுவிடாமல், ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்து அந்த அட்டைப் பெட்டியை ஒரு…

எண்ணங்கள் என்ன சொல்கின்றன? Ennangal Enna Solkindrana? Thought Says The Way To Go.

வாய்ப்பே வரம்:  ஒரு ஊரில் வீரன், சூரன் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.  ஒருநாள் இருவரும் தங்களுடைய குதிரைகளில் காட்டுவழியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.  மாலை நேரம் ஆகிவிட்டதால் தங்கள் குதிரைகளுக்குத் தேவையான உணவும், நீரும் கொடுத்துவிட்டு, இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து…

மனதின் ஊக்கமே செயலின் ஆக்கம். Manathin Ookkame Seyalin Aakkam. Ability of Action is the Porduct of Motivation.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்  உள்ளத் தனையது உயர்வு. என்று மனதின் சக்தியைத் திருவள்ளுவர் மிக நுட்பமாகக் கூறியுள்ளார்.    பொருத்தமான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றிபெற வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருக்கிறது.  இந்த எண்ணம் ஆக்கபூர்வமான செயலாக, மாபெரும் சாதனையாக…

காலமும், கடமையும் வெற்றியின் கைகள். Kaalamum, Kadamaiyum Vetriyin Kaikal.Schedule and Commitment are Hands of Victory.

கவசம்: உணவு, உடை, வாழ்க்கை முறை என எல்லாமே பருவக்காலத்திற்கு ஏற்றபடி, காலநேரம் பொறுத்தே அமைகிறது.  காலமும், கடமையும் வாழ்க்கையின் கவசம் என அறிந்த நம் மக்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தி வந்தார்கள்.  அதனால், சூரிய ஒளியில் கடுமையாக உழைத்தார்கள், களைப்புத் தீர இரவில் நன்கு உறங்கினார்கள், அதன்…

தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தனிமை: உடல்நிலையில், மனநிலையில், வாழ்க்கை அமைப்பில் என மனிதர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வாழ்நாள் போராட்டமாகவும் அமைந்து விடுவதுண்டு.  சந்திக்கும் ஒருநாளைகூட சாதாரண நாளாகக் கடந்து செல்ல முடியாத இந்தச் சவாலான வாழ்க்கையில், திடமான தன்னம்பிக்கையும், மலைபோன்ற மனஉறுதியும்தான்  சுவாசமாகச் செயல்படுகிறது.  தன்னுடைய ஒன்றரை வயதில், பார்வைப் புலனையும், செவிப்புலனையும், (அதன்…

கனவின் பாதையில் காண்பது என்ன? Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

இயற்கை சொல்லும் பாடம்: ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது.  இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன.  பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல நாட்களாக எண்ணற்ற மனிதர்களின் உழைப்புகளைப் …

ஈகோ, சுயமதிப்பு: வேறுபாடுகளும், விளைவுகளும். Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.

ஈகோ, நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது.  இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது.  எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ…

நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி: அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள்.  அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார்.  மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையும்…

உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.

உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன.  எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன.  இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது.   தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.  இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை.  இன்னும் சொல்லப்போனால்…

இயற்கையோடு இயைந்த குறளின் குரல். Iyarkaiyodu Iyaintha Kuralin Kural.

வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்: எல்லாப் பொருளும் இதன்பால் உள  இதன்பால்  இல்லாத எப்பொருளும் இல்லையாற்-  என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துக்களாக வள்ளுவர் சொல்லும் வாழ்வியலை இயற்கையோடு…