Sky, sea, land all are have their limits

எல்லை என்பது எதுவரை? How much is too much? Ellai Enbathu Ethuvarai?

  உறவுக்கு மரியாதை: குடும்பம், உறவுகள், கல்விக்கூடம், நட்பு, வேலை செய்யும் இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று நாம் சந்திக்கும் சகமனிதரிடம் நாம் வெளிக்காட்டும் அணுகுமுறையே அந்த உறவுநிலைக்கு நாம் தருகின்ற மரியாதையாக வெளிப்படுகிறது. *பறவையின் சிறகுகள் போல, ஒரு உறவை…
எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும்.  Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்களின் அமைப்பும் முக்கியத்துவமும். Ennangalin Amaippum Mukkiyaththuvamum. Importance of the Structure in Thoughts.

எண்ணங்கள்: பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒரு மாணவன், அன்று நடந்த போட்டியில் தன்னுடைய அணியின் தோல்விக்குத்  தானே முக்கியக் காரணம் என்று தன் நண்பர்களிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.   அவனுக்கு ஆறுதலாக…
பெற்றோர் என்ற பெற்றவர்கள்.  Parents.Petror Endra Petravarkal.

பெற்றோர் என்ற பெற்றவர்கள். Parents.Petror Endra Petravarkal.

உடலும் உயிரும் தந்தவரைப்  பெற்றோர் என்றே கூறுகின்றார். தந்தது எல்லாம் பெற்றதுதான்  என்றே அப்பெயர் பெற்றாரா!   யாரிடமிருந்து எதைப் பெற்று  பெற்ற கடனை அடைக்கின்றார்! பிள்ளைகள் என்ற பேறு பெற்று அவர்கள் நலனே மனதில் பெற்று   தலைமுறை தாக்கம்…
அதோ அந்தப் பறவை போல.  Adho Antha Paravai Pola.

அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.

சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே!   உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே!   சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே!   காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…
காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்  வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்  உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே  உண்மையான உன் பெயரைச் சொல்லு.   எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே   நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே  குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே குழலின்…
இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு.  Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

இயற்கையின் சர்ப்ரைஸ்; வாழ்க்கையில் வாய்ப்பு. Iyarkaiyin Surprise; Vaazhkkaiyil Vaaippu. Life is Full of Surprises.

உழைப்பின் பரிசு:   ஓர் ஊரில் சிவில் இன்ஜினீயர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு மிக்க பதவியில், மிகவும் உண்மையாக உழைத்து வந்தார்.  கட்டுமானத்திற்காக அவர் அக்கறையுடன் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் தரமும், வேலையில் அவருடைய திறமையும் அந்த…
A house in beautiful village

இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.

அரண்மனை: வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், "தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா?  அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?", என்று கேட்டார். மன்னனின் முகவாட்டத்திற்கான காரணத்தை யூகித்த அமைச்சர், "கணவன் மனைவிக்குள் ஒருநாள்கூட கோபம்…
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. Vallavanukku Vallavan Vaiyakaththil Undu.Mighty Man.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. Vallavanukku Vallavan Vaiyakaththil Undu.Mighty Man.

ஓர் ஊரில் பலவான் என்ற மல்யுத்த வீரன் இருந்தான்.  அவன் எப்போதும் கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான்.  இதனால் மிகவும் பலசாலியான அவன் போட்டிக்கு வரும் அனைவரையும் எளிதாக வென்றுவிடுவான்.  அவனால் பெருமையடைந்த அந்த ஊர் மக்கள் அவனைப் பாராட்டி மரியாதைச் செய்து கொண்டாடினார்கள்.   நாளடைவில்…
ஏணியாகும் எண்ணங்கள்:  Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

ஏணியாகும் எண்ணங்கள்: Eniyaagum Ennangal. Thoughts Raising the Quality.

நம்முடைய எண்ணங்களே நம்முடைய உயர்வுக்கும் பின்னடைவுக்கும்  காரணமாக இருக்கின்றன.  தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது  என்றும், அவை நம்முடைய எண்ணங்களின் விளைவால் ஏற்படுகின்றன என்றும் கற்றறிந்த, அனுபவமிக்கப் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் நம்முடைய வாழ்க்கையில் பிறருடைய தாக்கங்கள் இருக்காதா என்று யோசிக்கலாம்,…
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும்.  Malar Pola Malarkindra Manam Vendum. Refreshment of Mind.

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும். Malar Pola Malarkindra Manam Vendum. Refreshment of Mind.

பழையன கழிதலும், புதியன புகுதலும். சாதாரணமாக நம் வீடுகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் அந்தப் பொருளையும், அது சம்பந்தமான முக்கியமான ரசீதுகளையும் உரிய இடத்தில் பத்திரமாக வைப்போம்.  அதனுடைய அட்டைப்பெட்டியை உடனே வெளியில் போட்டுவிடாமல், ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்து அந்த அட்டைப் பெட்டியை ஒரு…