மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

    பயத்தின் முகம்:    ஓட்டுக்குள் ஒளிந்து,  தற்காத்துக்கொள்ளும்  தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி,  தாக்குதலுக்குத் தயாராகும்   பதட்டமும்,  பயத்தின் எல்லைக்குள்  நிறம் மாறுகின்ற  ஒரே முகம்தான்.   வலிமையின் முகம்.   தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத் தகர்ப்பதும்;   கணிக்கப்பட்ட நகர்வாக …

எதிர்நீச்சல். Ethirneechchal.

    பசி! காத்திருக்கும் உணவோடு  விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும்  பட்டினியா! என்பதை   சூழலும் வாய்ப்புமே     நிர்ணயிக்கின்றன.    தனிமை!  தானே விரும்பும் இனிமையா!  தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது.   போராட்டம். உயிரோடு உறவாடும்  உணர்வுகளுக்கு  உணவாகிப்…

பெற்றோர் என்ற பெற்றவர்கள். Petror Endra Petravarkal.

    உடலும் உயிரும் தந்தவரைப்  பெற்றோர் என்றே கூறுகின்றார். தந்தது எல்லாம் பெற்றதுதான்  என்றே அப்பெயர் பெற்றாரா!   யாரிடமிருந்து எதைப் பெற்று  பெற்ற கடனை அடைக்கின்றார்! பிள்ளைகள் என்ற பேறு பெற்று அவர்கள் நலனே மனதில் பெற்று  …

உங்கள் விருப்பம். Ungal Viruppam.

  தொலைக்காட்சியின் அறிவிப்பு: "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது,  .. .. .. .. .. .. ..  .. .. .. ..   ..  ..  ..  ..  ..  ..   ..  .. .. .." வியப்புடன் குழந்தை கேட்டது  "நாம்…

அன்பே கடவுள். Anbe Kadavul.

  அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி,  இயற்கையின் இயக்கமாகும் இறைவன்  பூசையில் மட்டுமே புகுவது இல்லை.   மனதில் கட்டிய கோயிலையும்   மதித்து வந்த இறைவன் அவன்.  மனமே முழுதும் அன்பென்றால்,    அகமே ஆலயம் என்பவன் இறைவன்.…

பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.

  நிமிர்ந்து நில்.   நிமிர்ந்து நின்றால்   சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால்  அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின்   வாய்ப்புக் கண்டு,   நிமிர்ந்து நின்று  செயலாற்று! என    நித்தமும் சொல்லும்  சுடர் விளக்கு.   

வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.

    சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது  யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம்…

ரௌத்திரம் “பழகு”. Roudhram “Pazhagu”. கோபம்! கையாள வேண்டியது .

  வாதம் செய்யும்  வாளின் கூர்மை,   வீண்வாதம் தவிர்க்கும் கேடய வலிமை.   தீக்குச்சியின்   தலைக்கனத்திற்கு  தீப்பெட்டியின்   தன்மையே   பதில் சொல்கிறது.   தகிக்கும் நெருப்பைக்   குளிர வைக்க   நீரைச் சேர்க்கலாம், ஆனால், கொதிக்கும் நீரைக்  குளிர்விக்க நெருப்பை விலக்குவதே  முதல்…

அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.

சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே!   உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே!   சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே!   காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…

என்றும் முழுநிலவே. Endrum MuzhuNilave.

      பார்வைகள்:   வட்ட நிலவே    தேயும், வளரும் என்று  வந்தவர் எல்லாம்  சொன்னாலும்,    அமாவாசை அன்று   பௌர்ணமி இன்றென  அந்தாதியே   பாடினாலும்,    நிலவின் மாற்றம்  நிலத்திலும் தெரிவதாய்  நிருபணமே  செய்தாலும்,   வளர்பிறைக்கும் …