ஆதாரபூர்வமான நம்பிக்கையே, தன்னம்பிக்கை. Aathaarapoorvamaana Nambikkaiye, Thannambikkai.Basic Proofs of Belief is the Evidence of Self Confidence,

நம்பிக்கையின் ஆதாரம்:  குறிக்கோளில் வெற்றியடைய வேண்டும் என்ற மனதின் ஒரு எண்ணம் நிறைவேற, நடைமுறையில் பல செயல்நிலைகளைக் கடக்க வேண்டி உள்ளது.  இவ்வாறு கடந்து வரும் செயல்பாடுகளே, தகுதிக்கான ஆதாரங்களாக (Proof of Active Activityயாக) மூளையில் பதிவாகின்றன.   மூளையின் இந்தப்…

நம்பிக்கையின் இலக்கு. Nambikkaiyin Ilakku. Benchmark of Belief.

இலக்கு: 'ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மனிதர்களால் ஓடிக் கடக்க முடியாது', என்று யாராவது கூறினால், இன்று அந்தக் கருத்து நகைப்புக்கு உரியதாகவே இருக்கும்.   ஆனால், 1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள்வரை உலகம்…

சூழ்நிலைக்குள் முழுகாமல் காத்துக்கொள்ள முடியுமா? Soozhnilaikkul Muzhugaamal Kaaththukkolla Mudiyuma? Presence of Mind.

ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான்.  அவனுக்கு அறிவும், அழகும் உள்ள தைரியமான மகள் இருந்தாள்.  அந்த வணிகன் ஒருமுறை தன்னுடைய வியாபாரத்திற்குத் தேவைப்பட்ட பெரிய தொகையை அந்த ஊரில் இருந்த செல்வந்தனிடம் கடனாக வாங்கியிருந்தான்.  ஆனால் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட…

இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.

அரண்மனை: வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், "தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா?  அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?", என்று கேட்டார். மன்னனின் முகவாட்டத்திற்கான காரணத்தை யூகித்த அமைச்சர், "கணவன் மனைவிக்குள் ஒருநாள்கூட கோபம்…

பலவீனத்தை இழந்தால் முழுபலத்தைப் பெறமுடியும். எப்படி? Balaveenaththai Izhanthaal Muzhubalaththai Peramudiyum.Eppadi? Make it by WILLPOWER.

சூழ்நிலை காரணமாகவோ, தன்னிலை காரணமாகவோ தவிர்க்கமுடியாத சில மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.  இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் சுயத்தைத் தொலைத்துவிட்டு பலவீனம் அடைந்துவிடாமல், சுயபலத்தோடு வாழ்வதற்குத் தேவைப்படும் மனவலிமையே எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறது. மாற்றங்களை விழிப்புணர்வு இன்றி சந்திக்கும்போது அவை புறநிலை மாற்றங்களாக, அல்லது புறத்தோற்றங்களை…

மனவலிமையை வளர்த்துக்கொள்வது எப்படி? Manavalimaiyai Varththukkolvathu Eppadi? How to Establish the Mental Strength?

உன்னால் முடியாதென்று யார் சொன்னாலும் நம்பாதே.  உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டுபிடிக்க முதலில் "உன்னை நீ நம்பு", என்று தான் வாழ்ந்து காட்டிய ஒரு வீரரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றை நம் சிந்தனையில் காண்போமா?   காஷியஸ் மார்செல்லஸ் கிளே என்ற பத்துவயது சிறுவன்…

கஞ்சன் தந்த கூலியும், அதை மிஞ்சிய வேலையும். Kanjan Thantha Kooliyum, Athai Minjiya Velaiyum. Simple Strategy.

ஓர் ஊரில் இருக்கும் செல்வந்தரிடம் முருகன் என்பவன் வேலை செய்துகொண்டிருந்தான்.  செல்வந்தருடைய தென்னந்தோப்பு, மாந்தோப்பு மற்றும் காய்கறி தோட்டம் போன்றவற்றைச் செழிப்பாகப் பராமரித்துக் கொண்டு பொறுப்போடு இருந்தான்.  செல்வந்தரும் முருகனுக்குத் தோட்டத்திலேயே சிறிய வீடு கொடுத்து, அவனுக்கு நல்ல சம்பளமும் கொடுத்துத் தன் வீட்டிலேயே உணவளித்து, அன்பாகக்…

போலிவள்ளலின் தந்திரமும், ஒளவையின் சாதுர்யமும். PoliVallalin Thanthiramum, Avvaiyin Saathuryamum. Tact and Diplomacy.

ஓர் ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான்.  அவன் தன்னுடைய செல்வத்தைப் பயன்படுத்தி யாருக்கும் எந்த நன்மையும் செய்தறியாதவன்.  ஆனால், புலவர்கள் வள்ளல்களை நாடுவதுபோல தன்னையும் நாடி வந்து பாடிப் புகழ வேண்டும் என்று விரும்பினான்.  ஆனால் அதற்காக ஒரு காசுகூட செலவு செய்துவிடக் கூடாது…

மனஅழுத்தம் எனும் stress. தவிர்க்க வழி இருக்கிறதா? Mana Azhuththam Enum Stress. Thavirkka Vazhi Irukkirathaa? Way To Handle the Stress.

முன்குறிப்பு: சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் சூழல்களில், மனஅழுத்தம் ஏற்படாமல் அவற்றைக் கையாள முடியுமா என்ற சிந்தனையே இந்தப் பகிர்வு.  மனஅழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் துறைசார்ந்தவர்களை அணுகுவதே முறையானது.   காரணங்கள்: இன்றைய வேகமான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை  அனைவரது இயல்பு வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மனஅழுத்தம் ஏன் ஏற்படுகிறது?  மனஅழுத்தம்…

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. Vallavanukku Vallavan Vaiyakaththil Undu.Mighty Man.

ஓர் ஊரில் பலவான் என்ற மல்யுத்த வீரன் இருந்தான்.  அவன் எப்போதும் கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான்.  இதனால் மிகவும் பலசாலியான அவன் போட்டிக்கு வரும் அனைவரையும் எளிதாக வென்றுவிடுவான்.  அவனால் பெருமையடைந்த அந்த ஊர் மக்கள் அவனைப் பாராட்டி மரியாதைச் செய்து கொண்டாடினார்கள்.   நாளடைவில்…