தன்னம்பிக்கை தேவதை ஹெலன் கெல்லர். Thannambikkai Dhevathai Helen Keller. Power of Positiveness.

தனிமை: உடல்நிலையில், மனநிலையில், வாழ்க்கை அமைப்பில் என மனிதர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வாழ்நாள் போராட்டமாகவும் அமைந்து விடுவதுண்டு.  சந்திக்கும் ஒருநாளைகூட சாதாரண நாளாகக் கடந்து செல்ல முடியாத இந்தச் சவாலான வாழ்க்கையில், திடமான தன்னம்பிக்கையும், மலைபோன்ற மனஉறுதியும்தான்  சுவாசமாகச் செயல்படுகிறது.  தன்னுடைய ஒன்றரை வயதில், பார்வைப் புலனையும், செவிப்புலனையும், (அதன்…

தகுதியின் அளவுகோல். கதையும், கருத்தும். Thaguthiyin Alavukol. Kathaiyum, Karuththum. Standard of Quality.

ஒரு நாட்டின் மன்னர் தன் நாட்டுமக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டவராக இருந்தார்.  அதனால் அனுபவம் நிறைந்த மதியுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்தி நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்.   மேலும், மக்களின் உண்மையான நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல…

கனவின் பாதையில் காண்பது என்ன? Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

இயற்கை சொல்லும் பாடம்: ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது.  இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன.  பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல நாட்களாக எண்ணற்ற மனிதர்களின் உழைப்புகளைப் …

ஈகோ, சுயமதிப்பு: வேறுபாடுகளும், விளைவுகளும். Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.

ஈகோ, நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது.  இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது.  எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ…

குகையிலிருந்து ஒரு பயணம். Gugaiyilirunthu Oru Payanam. Travel of Thoughts and Technology.

நிமிர்ந்த மனிதன்: இயற்கையான வளங்களும் எண்ணற்ற உயிர்களும் நிறைந்திருக்கும் இவ்வுலகில், மனிதனின் அறிவு வளர்ச்சிக்குச் சாட்சியாகவும் பல்வேறு பொருட்கள் பெருமளவு ஆக்ரமித்து இருக்கின்றன. கண்டுபிடிப்புகள் என்பவை நெருப்பு, உடை, சக்கரம் போன்ற அடிப்படை தேவைகளைக் கடந்து, மனித அறிவின் ஆற்றலை அறிவிக்கும் வகையில், அபாரமான…

நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி: அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள்.  அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார்.  மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையும்…

உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.

உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன.  எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன.  இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது.   தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.  இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை.  இன்னும் சொல்லப்போனால்…

அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?

அன்புமொழி:  தன்னைப் போல பிறரை என்னும்  தன்மை வேண்டுமே  அந்தத் தன்மை வர உள்ளத்திலே  கருணை வேண்டுமே!  என்ற பாடலைக் கேட்டிருப்போம்.  இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை உணர்ந்து உதவும்…

வெளித்தோற்றமும் மனமாற்றமும். Veliththotramum Manamaatramum. Appearances May Change The Mindset.

அடையாளம்: வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஆனாலும் நாம் அத்தகைய ஒரு சிந்தனைக்குப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே?   அதன் அடிப்படையில்தான் நாமும் நம்முடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம்.  இதைப்போலவே மற்றவர்களின் வெளிப்பாடுகளும்…

காட்சிப் பிழையா? கருத்தில் பிழையா? Kaatchi Pizhaiya? Karuththil Pizhaiya? Reality vs Hypothetical

குட்டி கதை: பெரியதம்பி, வெளியூரில் ஒரு வேலையை முடித்துவிட்டுத்  தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்கு வந்தான்.  தான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் அங்கிருந்த மூவர் அமரும் வகையில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.  தன்னுடைய சிறிய கைப்பையை அருகில்…